பஸ் கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
பஸ் கட்டண உயர்வை கண்டித்து நாகர்கோவில், தூத்தூர் கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நித்திரவிளை,
நித்திரவிளை அருகே கடற்கரை கிராமமான தூத்தூர் உள்ளது. இங்கு புனித யூதா ததேயு கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலையும் மாணவ-மாணவிகள் வழக்கம் போல் கல்லூரிக்கு வந்தனர். 10 மணியளவில் வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்த அவர்கள், ஊர்வலமாக நித்திரவிளை சந்திப்பு பகுதிக்கு சென்றனர்.
பின்னர், அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அரசின் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த நித்திரவிளை போலீசார் விரைந்து வந்தனர். மேலும், குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதைதொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கல்லூரிக்கு சென்றனர்.
கல்லூரி முன்பு சென்ற அவர்கள் திடீரென அங்கும் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல் பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் அருகே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பஸ் கட்டண உயர்வைக் கண்டித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும் அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஜெசின் தலைமை தாங்கினார். மாணவர் சங்க நிர்வாகிகள், மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அரை மணி நேரம் நடந்த போராட்டத்துக்குப்பிறகு மாணவ-மாணவிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story