பஸ் கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம்
வேலூரில் நேற்று இரண்டாவது நாளாக கல்லூரி மாணவர்கள், பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வேலூர்,
தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வேலூரில் நேற்று முன்தினம் முத்துரங்கம் கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று காலையில் கல்லூரிக்கு வந்த அவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் 2-வது நாளாக கல்லூரி வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் ரோட்டிற்கு வராமல் இருக்க போலீசார், கல்லூரி கேட்டை பூட்டிவைத்தனர். இதை பார்த்த மாணவ- மாணவிகள் கேட்டைதிறந்துகொண்டு வெளியே வர முயற்சி செய்தனர்.
அவர்களை போலீசார் தடுத்தனர். அதையும் மீறி மாணவர்கள் வெளியேவர முயற்சி செய்தனர். இதனால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மாணவ- மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் சென்றுவிட்டனர்.
அதேபோன்று நேற்று ஊரீசு கல்லூரி மாணவ- மாணவிகளும் பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் கலைந்து சென்றனர்.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளும் நேற்று பஸ் கட்டண உயர்வை கண்டித்து கருப்புபேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்ப பெறக்கோரியும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி மாணவர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 2-வது நாளாக நேற்று காலையில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து கல்லூரிக்கு வெளியே குடியாத்தம் - காட்பாடி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாட்டறம்பள்ளியை அடுத்த அக்ராவரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து திடீரென நாட்டறம்பள்ளி - திருப்பத்தூர் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலிலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கல்லூரிக்கு செல்ல அறிவுறுத்தினர். அதன்பேரில் மாணவர்கள் சாலைமறியலை கைவிட்டு, வகுப்பிற்கு சென்றனர்.

Related Tags :
Next Story