பஸ் கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவிகள் சாலை மறியல்


பஸ் கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Jan 2018 4:15 AM IST (Updated: 25 Jan 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஒரத்தநாட்டில் கல்லூரி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஒரத்தநாடு,

பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஒரத்தநாடு பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி அருகே உள்ள பெரியார் சிலை அருகில் சாலையின் குறுக்கே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மாணவிகளை அங்கியிருந்து அப்புறப்படுத்தினர். இதேபோல் திருவோணத்தை அடுத்துள்ள ஏனாதி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரி மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

10 பேர் கைது

மேலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அருளரசன் தலைமையில் பஸ் கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி ஒரத்தநாடு அண்ணாசிலை அருகில் சாலையின் குறுக்கே தரையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு வந்த ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் 10 பேரை கைது செய்தனர். 

Next Story