வார்டு மறுவரையறை தொடர்பாக 500 ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டு உள்ளன கலெக்டர் வெங்கடேஷ் தகவல்


வார்டு மறுவரையறை தொடர்பாக 500 ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டு உள்ளன கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
x
தினத்தந்தி 26 Jan 2018 2:30 AM IST (Updated: 25 Jan 2018 7:14 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில், வார்டு மறுவரையறை தொடர்பாக 500 ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டு உள்ளதாக, கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில், வார்டு மறுவரையறை தொடர்பாக 500 ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டு உள்ளதாக, கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

வார்டுகள் மறுவரையறை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு, வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களிடம் இருந்து ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கடந்த 12–ந் தேதி வரை மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சேபனை

இதில், மாவட்டத்தில் ஊரக பகுதியில் இருந்து 98 ஆட்சேபனை மனுக்களும், நகர்ப்புறங்களில் இருந்து 402 ஆட்சேபனை மனுக்களும் ஆக மொத்தம் 500 மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் மீதான முன்னோடி கலந்தாய்வு கூட்டம் வருகிற 31–ந் தேதி மாலை 4–30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனை மனுக்கள் அளித்த பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மட்டும் கலந்து கொண்டு, தங்கள் மனு தொடர்பான கருத்துக்களை தெரிவிக்கலாம்.

மண்டல அளவில்...

மேலும் வருகிற 3–ந் தேதி தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தால் மண்டல அளவிலான கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் ஏற்கனவே மனுக்கள் அளித்தவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம். மனு கொடுத்தவர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. மேற்கண்ட கூட்டங்களில் புதிய ஆட்சேபனை குறித்த மனுக்கள் ஏற்கப்படாது.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story