சிறுமியை கற்பழித்த 80 வயது முதியவர் கைது


சிறுமியை கற்பழித்த 80 வயது முதியவர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2018 3:15 AM IST (Updated: 26 Jan 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

மும்பை சிவ்ரி பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வந்தாள். சிறுமியின் வீட்டின் அருகே அன்வர் அலி(வயது80) என்ற முதியவர் தனியாக வசித்து வந்தார்.

மும்பை,

அன்வர் அலிக்கு சிறுமியின் தாயார் உணவு கொடுத்து உதவி செய்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று அன்வர் அலி வீட்டில் இருந்த காலிதட்டை எடுத்து வருமாறு சிறுமியிடம் அவரது தாய் கூறினார்.

இதையடுத்து சிறுமி அங்கு சென்றபோது, வீட்டில் இருந்த அன்வர் அலி சிறுமியை மிரட்டி கற்பழித்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவம் குறித்து தாயிடம் அழுதபடியே தெரிவித்தாள். இதனால் பதறிப்போன சிறுமியின் தாய் சம்பவம் குறித்து ஆர்.ஏ.கே. மார்க் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்வர் அலியை கைது செய்தனர். மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story