விமானத்தில் ரூ.27½ லட்சம் தங்கம் கடத்தி வந்தவர் கைது
டெல்லியில் இருந்து விமானத்தில் ரூ.27½ லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டு பணத்துடன் பெண் உள்பட 2 பேர் சிக்கினர்.
மும்பை,
இந்த சோதனையில் அவரது ஆசனவாயில் தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கக்கட்டிகள் 1 கிலோ எடை கொண்டதாக இருந்தன. இதன் மதிப்பு ரூ.27 லட்சத்து 66 ஆயிரம் ஆகும். பின்னர் அவர் சகார் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல சர்வதேச விமான நிலையத்தில் துபாய் நாட்டிற்கு விமானத்தில் பயணிக்க வந்த பெண் பயணி உள்பட 2 பேரை அதிகாரிகள் தனி அறையில் வைத்து சோதனையிட்டபோது, அவர்கள் தங்களது ஆசனவாயில் தனித்தனியாக மறைத்து வைத்திருந்த 24 ஆயிரத்து 500 மற்றும் 25 ஆயிரம் யூரோ கரன்சிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை கைது செய்தனர். இவற்றின் இந்திய மதிப்பு ரூ.37 லட்சத்து 86 ஆயிரம் ஆகும்.பின்னர் இருவரும் சகார் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்களது பெயர் பிரமிளா, முஸ்தபா அகமது பிரோஸ்கான் ஆகியோர் என்பது தெரியவந்தது.
Related Tags :
Next Story