ஏரியில், மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆசிரியர் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
வேதாரண்யம் அருகே ஏரியில், ஆசிரியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 34). இவர் வெள்ளப்பள்ளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் சிவக்குமார், வீட்டை விட்டு வெளியில் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், சிவக்குமாரை பல்வேறு இடங்களிலும் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் காலணி ஆகியவை வெள்ளப்பள்ளம் ஏரி அருகே கிடந்தது.
அந்த வழியாக சென்றவர்கள் ஏரியில் ஒரு உடல் மிதந்ததை பார்த்தனர். உடலில் காயங்களும் இருந்தன. இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியில் மிதந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்தது கிடந்தவர் மாயமான பள்ளி ஆசிரியர் சிவக்குமார் என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார், சிவக்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிவக் குமார் எப்படி இறந்தார்? அவரை யாரேனும் அடித்து கொன்று உடலை ஏரியில் வீசி விட்டு சென்றனரா? என விசாரணை நடத்தி வருகின் றனர். வீட்டை விட்டு வெளியில் சென்று மாயமான ஆசிரியர் ஏரியில் பிணமாக மிதந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story