மாணவர் விடுதி சமையல்காரர் மர்மச்சாவு போலீஸ் விசாரணை


மாணவர் விடுதி சமையல்காரர் மர்மச்சாவு போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 28 Jan 2018 3:45 AM IST (Updated: 28 Jan 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடி காங்கேயநல்லூரில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி சமையல்காரர் திடீரென இறந்துவிட்டார். அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்பாடி,

காட்பாடி காங்கேயநல்லூர் இந்திரா நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 59). இவர் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் பெரியார் பூங்கா அருகே உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் மகாலிங்கம் திடீரென இறந்துவிட்டார்.

அவர் கொலை செய்யப்பட்டு விட்டதாக விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று மகாலிங்கத்தின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது மகாலிங்கம் தவறி விழுந்து இறந்து விட்டதாக வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்ததால் மகாலிங்கத்தின் சாவில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story