பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2018 4:30 AM IST (Updated: 28 Jan 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் கரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தோழமை கட்சியினர் பங்கேற்றனர்.

கரூர்,

தமிழகத்தில் கடந்த 20-ந்தேதி முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந் தது. அதன்படி கரூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை தொடர்பாக கோஷங்கள் எழுப்பினர். பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் வருகிற 29-ந்தேதி மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

தோழமை கட்சி நிர்வாகிகள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி, ராமர் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க்சுப்ரமணியன், செய்தி தொடர்பாளர் ஜோதிமணி மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, எம்.ஜி.ஆர். கழகம் உள்பட தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தி.மு.க.வினர் பலர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். 

Next Story