மகதாயி நதிநீர் பிரச்சினையில் மக்களுக்கு சித்தராமையா துரோகம் செய்து விட்டார்
மகதாயி நதிநீர் பிரச்சினையில் மக்களுக்கு சித்தராமையா துரோகம் செய்து விட்டார் என்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு,
மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பாக பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மகதாயி நதிநீர் பிரச்சினையில் தலையிட வேண்டும், 3 மாநில முதல்-மந்திரிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஏற்க பா.ஜனதா தலைவர்கள் மறுத்து விட்டார்கள். இதனால் அனைத்து கட்சி கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து பெங்களூருவில் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
மகதாயி நதிநீர் பிரச்சினையில் ஏற்கனவே நடந்த அனைத்துக்கட்சி கூட்டங்களில் கோவா, மராட்டியத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் தலைவர்களை சமாதானப்படுத்தும்படி பா.ஜனதா தனது கருத்தை தெரிவித்து இருந்தது. அந்த மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடப்பதால், அந்த மாநில முதல்-மந்திரிகளுடன் நாங்கள் பேசுவோம் என்று கூறி இருந்தோம். அதன்படி, கடந்த சில ஆண்டுகளாக மகதாயி நதிநீர் பிரச்சினையை தீர்க்க பா.ஜனதா நடவடிக்கை எடுத்து வந்தது. கோவா, மராட்டிய முதல்-மந்திரிகளை நான் உள்பட பா.ஜனதா தலைவர்கள் சந்தித்து பேசினோம்.
கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக எனக்கு கடிதம் எழுதினார். இந்த பிரச்சினையை காங்கிரஸ் கட்சியினர் அரசியலாக்கினார்கள். இதனால் கோவாவில் எதிர்க்கட்சிகளாக உள்ள காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மகதாயி நதிநீர் பிரச்சினை சுமார் 30 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. சோனியா காந்தி ஏற்கனவே கர்நாடகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது என்று கூறி இருந்தார். தற்போது காங்கிரஸ் தலைவராக உள்ள ராகுல்காந்தி மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து, இதுவரை பேசவில்லை. மகதாயி நதிநீர் பிரச்சினையில் ராகுல்காந்தி தனது நிலைப்பாடு பற்றி வாய்திறக்கவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் மகதாயி பிரச்சினையில் அரசியல் செய்யவே பிரதமர் தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள்.
கோவா, மராட்டிய மாநில எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தாமல் மகதாயி நதிநீர் பிரச்சினையில் அரசியல் செய்து கர்நாடக மக்களுக்கு முதல்-மந்திரி சித்தராமையா துரோகம் செய்துவிட்டார். சித்தராமையாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் வருகிற சட்டசபை தேர்தலில் கர்நாடக மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Related Tags :
Next Story