விவசாய நிலங்களில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
நந்தீபுரா கிராமத்தில் விவசாய நிலங்களில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. தென்னை மரங்களை அவைகள் முட்டித்தள்ளியதில் மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன.
ஹலகூர்,
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பசவனபெட்டா வனப்பகுதியில் இருந்து கூட்டமாக வெளியேறிய 4 காட்டுயானைகள், நந்தீபுரா கிராமத்திற்குள் புகுந்தன. பின்னர் அவைகள் கிராமத்தையொட்டி அமைந்துள்ள சித்தேகவுடா, சிவலிங்கேகவுடா, ஜெயராமு, ராமேகவுடா, பிரேமா ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலங்களுக்குள் புகுந்தன. அங்கிருந்த வாழைகள் மற்றும் நெற்பயிர்களை காலால் மிதித்தும், பிடுங்கி தின்றும் நாசப்படுத்தின. மேலும் அங்கிருந்த தென்னை மரங்களையும் முட்டித்தள்ளின. இதில் சில மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. பின்னர் அவைகள் நேற்று அதிகாலை வரை அங்கேயே தஞ்சம் அடைந்தன.
இந்த நிலையில் அதிகாலை வேளையில் அந்த வழியாக சென்ற கிராம மக்கள் காட்டுயானைகள் விவசாய நிலங்களில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி சம்பந்தப்பட்ட தோட்டங்களின் உரிமையாளர்களுக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேளங்கள் அடித்தும், பட்டாசுகள் வெடித்தும், தீப்பந்தங்களை காண்பித்தும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.இதற்கிடையே பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரி வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வனத்துறையினர் இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நஷ்ட ஈடு பெற்றுத்தருவதாக உறுதி அளித்தனர். விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.