மின் தொகுப்பு நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு பணி
மின்தொகுப்பு நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு கேட் தேர்வு அடிப்படையில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்திய மின் தொகுப்பு கழக நிறுவனம் சுருக்கமாக பி.ஜி.சி.ஐ.எல். என அழைக்கப்படுகிறது. மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான இது மத்திய மின்சாரத்துறையின் கீழ் செயல்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய மின்பரிமாற்ற நிறுவனமாக திகழும் இந்த நிறுவனத்தில் தற்போது அசிஸ்டன்ட் என்ஜினீயர் டிரெயினி பணியிடங்களை கேட் 2017 தேர்வின் அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. எலக்ட்ரிக்கல் பிரிவில் 100 பேரும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 20 பேரும், சிவில் பிரிவில் 20 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 10 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 150 இடங்கள் நிரப்பப்படுகின்றன.
பி.இ., பி.டெக் மற்றும் பி.எஸ்சி. என்ஜினீயரிங் படித்து 2017-க்கான கேட்தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் 31-12-2016-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பணிக்கேற்ற உடல்தகுதி பெற்றிருக்க வேண்டும். இதற்கான மருத்துவ பரிசோதனை நடைபெறும்.
விருப்பமும் தகுதியும்உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 17-2-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் தவிர்த்த மற்றவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.powergridindia.com என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

Related Tags :
Next Story