விமான நிலையத்தில் ரூ.25 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
திருச்சி விமான நிலையத்தில் ரூ.25¾ லட்சம் கடத்தல் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செம்பட்டு,
சிங்கப்பூரில் இருந்து நேற்று அதிகாலை திருச்சிக்கு ஒரு தனியார் விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் வந்த ஒரு பயணி மீது சந்தேகப்பட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த ரகுமான் என்று தெரிந்தது.
பின்னர் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், 234 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் தங்ககட்டிகளை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.7 லட்சத்து 12 ஆயிரம் ஆகும்.
இதேபோன்று துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சந்தேகப்படும்படி வந்த பயணியிடம் விசாரித்தபோது, அவர் சென்னையை சேர்ந்த மன்சூர்அலி என்பதும், அவர் ஹேர் டை டப்பாவில் மறைத்து 468 கிராம் எடை உள்ள தங்கத்தை கடத்தி வந்ததும் தெரிந்தது. இதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.14 லட்சத்து 24 ஆயிரம் ஆகும்.
இதேபோல் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று காலை திருச்சி வந்த தனியார் விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை வான்நுண்ணறிவுபிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையை சேர்ந்த ரிஸ்வான் என்ற பயணியை சோதித்தபோது, அவருடைய பேண்ட் பாக்கெட்டில் 4 கைக்கடிகாரங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த கைக்கெடிகாரங்களை வாங்கி பிரித்து பார்த்தனர்.
அதில் சிறு, சிறு துண்டுகளாக 28 தங்க கட்டிகள் மறைத்து கடத்தி வரப்பட்டு இருந்தது தெரியவந்தது. மொத்தம் 148 கிராம் எடை கொண்ட அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 49 ஆயிரம் இருக்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக ரிஸ்வானிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.25 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story