மக்காச்சோள மாவு கலப்படம் செய்வதால் மரவள்ளி கிழங்கு விலை சரிவு விவசாயிகள் புகார்
ஜவ்வரிசி ஆலைகளில் மக்காச்சோள மாவு கலப்படம் செய்வதால், மரவள்ளி கிழங்கு விலை சரிவடைந்து இருப்பதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள், அதற்கு அதிகாரிகள் அளித்த பதில் வருமாறு:-
மெய்ஞானமூர்த்தி:- பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஒரேஅளவு மற்றும் தரத்தில் எரிபொருட்கள் கிடைப்பது இல்லை. எனவே குழு அமைத்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கலெக்டர்:- பெட்ரோல் நிலையங்கள் கண்காணிக் கப்படும்.
கலப்படம்
சுந்தரம்:- நீரா பானத்தை 3 சதவீத தென்னை மரங்களில் இருந்து மட்டுமே இறக்கவேண்டும் என்கிற நிபந்தனையை தளர்த்தவேண்டும். கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள ஆற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். கலப்படம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எடுத்த கடுமையான நடவடிக்கை காரணமாக மரவள்ளிகிழங்கு ஒரு மூட்டை ரூ.750 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது அது ஒரு மூட்டைக்கு ரூ.200 வரை குறைந்துவிட்டது. இதற்கு காரணம் மீண்டும் மக்காச்சோள மாவு கலப்படம் தலைதூக்க தொடங்கிவிட்டது. எனவே ஜவ்வரிசி ஆலைகளில் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கலெக்டர்:- கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள ஆற்றில் ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும். மக்காச்சோள மாவு கலப்படம் உள்ளதா? என்பதை கண்டறிய ஆய்வுக்குழுவினர் மீண்டும் சோதனை நடத்துவார்கள்.
கரும்பு நிலுவைத்தொகை
நல்லாகவுண்டர்:- பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் சர்க்கரைஆலை கடந்த 4 ஆண்டுகளாக கரும்பு பணம் நிலுவையாக ரூ.63 கோடி வைத்துள்ளது. தமிழகஅரசு கடந்த 12-ந்தேதிக்குள் நிலுவை தொகை முழுவதையும் கொடுக்கவேண்டும் என உத்தரவிட்ட பிறகும், ஒரு குறைந்த தொகையை கொடுத்து வேறு பாக்கி இல்லை என கூறி கையொப்பம் இடவேண்டும் என விவசாயிகளை நிர்ப்பந்தம் செய்து வருகிறது. எனவே தாங்கள் கரும்பு நிலுவைதொகை முழுமையாக விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். முத்தரப்பு கூட்டத்தை கூட்டுவதற்கான அறிவிப்பையும் வெளியிடவேண்டும்.
கலெக்டர்:- அரசு சார்பில் முத்தரப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு விட்டது. எனவே சர்க்கரைஆலை உயர் அதிகாரிகளிடம் கேட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மும்முனை மின்சாரம்
சந்திரசேகரன்:- கல்குறிச்சி கிராமத்தில் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் கிடைக்க செய்யவேண்டும்.
கலெக்டர்:- பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மின்சாரமும் தொடர்ச்சியாக கிடைக்க உரிய வழிவகை செய்யப்படும்.
தங்கவேல்:- ஜமீன்எளம்பள்ளி கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு புகார் தொடர்பாக பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதற்கு பிறகு எவ்வித பணியும் அங்கு நடைபெறாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் கடன் பெறமுடியாமல் தவிக்கிறோம்.
கலெக்டர்:- கூட்டுறவு துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
வேலைநிறுத்தம்
சரவணன்:- போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டபோது நகர்புறங்களில் பஸ்கள் இயக்கப்பட்டாலும், கிராம புறங்களில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் நாங்கள் தொழிலாளர்களுக்கு கூலியை அதிகரித்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது. எனவே அதுபோன்ற காலங்களில் கிராமபுறங்களுக்கு எவ்வித தடையும் இன்றி பஸ்கள் சென்றுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கலெக்டர்:- உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
வையாபுரி:- மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் 500 கனஅடி தண்ணீர் அப்படியே வரவேண்டும். ஆனால் இடையில் உள்ள 7 பேரேஜ்களில் தேக்கி வைக்கப்படுகின்றன. இதை கண்காணிக்க குழு அமைக்கவேண்டும். கலெக்டர்:- இது தொடர்பான புகார்களை எப்போது வேண்டுமானாலும் என்னிடமும், அதிகாரிகளிடமும் தெரிவிக்கலாம். இவ்வாறு விவாதங்கள் நடந்தது.
முன்னதாக விவசாயி நடேசன் தனியார் சர்க்கரை ஆலை பிரச்சினை மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய சின்ன கரசபாளையத்தை சேர்ந்த மனோ என்பவர் குமரிபாளையம் குவாரியில் மாட்டுவண்டிக்கு மணல் கொடுப்பதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், தனக்கு வீடுகட்ட மாட்டுவண்டியில் மணல் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், ஆற்றில் மணல் அள்ளினால் நிலத்தடிநீர் பாதிக்கப்படும் என கூறியதால் சிறிது நேரம் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
கூட்டம் முடிந்து கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மனு வாங்கிக்கொண்டு இருந்தபோது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் தனது மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. கூட்டத்திலும் பேச அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டினார். இதனால் கோபம் அடைந்த மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, அவரை எச்சரித்தார். பின்னர் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விவசாயி சிவக்குமாரை கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றினர்.
முன்னதாக கூட்டத்திற்கு துறைஅதிகாரிகள் சிலர் வருகை தரவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வருகைதராத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, ஆவின் தலைவர் சின்னுசாமி, நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் பொறியாளர் சந்தானம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story