தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தல் நடப்பதாக புகார்: லாரிகள் செல்ல அமைக்கப்பட்டிருந்த சாலையை அகற்றி போலீஸ் நடவடிக்கை
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தல் அதிகளவில் நடந்து வந்தது.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தல் அதிகளவில் நடந்து வந்தது. ஆற்றுக்குள் லாரி, டிராக்டர்கள் சென்று வரும் வகையில் மண் சாலை ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தது. மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வந்தனர்.
இதையறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தென்பெண்ணையாற்றில் மணல் கடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த சாலையை உடனடியாக அகற்றுமாறு, மூங்கில்துறைப்பட்டு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, தென்பெண்ணையாற்றில் அமைக்கப்பட்டிருந்த மண்சாலையை போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அவர்களை பற்றி விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story