மாவட்டத்தில், தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் தேரோட்டம்
தைப்பூசத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முருகன் கோவில்களில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டி கந்தகிரி பழனியாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்தை முன்னிட்டு தேர்த்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பூத வாகனம், ஆட்டுக்கிடா, மயில் வாகனம், காமதேனு, ரிஷபம், யானை போன்ற வாகனங்களில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு சாமி தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்து, தேரோட்டம் நிகழ்ச்சி தொடங்கியது. மலையை சுற்றி உள்ள பாதையில் பக்தர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு தேரை இழுத்தனர். வழி நெடுகிலும் ஏராளமான பெண்கள் தேங்காய், பழம் வைத்து சாமியை வழிபட்டனர். இந்த தேரோட்ட நிகழ்ச்சியை காண நாமக்கல், கூலிப்பட்டி, ரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தூசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டு இருந்தனர்.
ராஜ அலங்காரம்
நாமக்கல் – மோகனூர் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு சாமிக்கு 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 108 சங்கு பூஜையும், சாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு சாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மோகனூர்
மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, இரவு சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. விழாவில் நேற்று காலை 11 மணிக்கு முருகர், விநாயகர் சாமிகளின் தேரோட்டம் நடைபெற்றது. தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து கோவிலை சுற்றிவந்து நிலை சேர்த்தனர்.
விழாவை முன்னிட்டு பக்தர்கள் மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து கீர்த்தகாவடி, பால்காவடி, இளநீர் காவடிகள் எடுத்து வந்து சாமிக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்று சந்தன காப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செங்கோடு
திருச்செங்கோடு பெரிய பாவடியில் தைப்பூச விழாவை முன்னிட்டு சிறப்பு பந்தல் அமைத்து முருகர் வழிபாடுகள் நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் பால்காவடி, இளநீர் காவடி எடுத்து மேளதாளம் முழங்க சிறப்பு பந்தலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக நடனமாடியபடி முத்துகுமாரசாமி கோவிலுக்கு வந்தனர். அப்போது பக்தர்கள் திருப்புகழ், கந்தர் அலங்காரம் பாடல்களை பாடியபடி வந்தனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
திருச்செங்கோடு நெசவாளர் காலனி, ராஜாகவுண்டம்பாளையம், சட்டையம்புதூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல தைப்பூச விழாவையொட்டி திருச்செங்கோடு மலையடிவாரம் ஆறுமுகசாமி கோவில், அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவிலில் உள்ள செங்கோட்டு வேலவர் சாமி, நெசவாளர் காலனி சுப்பிரமணியர் கோவில், பெரிய முத்துகுமாரசாமி கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகளுடன் பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர். நேற்று மாலை சந்திரகிரகணம் வந்ததால் தைப்பூச சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் பிற்பகல் 3 மணிக்குள் நடத்தி முடிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும்
இதேபோல மாவட்டம் முழுவதும் பல்வேறு முருகன் கோவில்களில் நேற்று தைப்பூசத்தையொட்டி தேரோட்டம் நடத்தப்பட்டு, சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story