ஆவடியில் லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் வங்கி பெண் ஊழியர் பலி


ஆவடியில் லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் வங்கி பெண் ஊழியர் பலி
x
தினத்தந்தி 1 Feb 2018 6:44 AM IST (Updated: 1 Feb 2018 6:44 AM IST)
t-max-icont-min-icon

ஆவடியில் லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் வங்கி பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

ஆவடி,

ஆவடியை அடுத்த விஜயலட்சுமி நகர் அலமாதி ரோட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 36) ஏ.சி. மெக்கானிக். இவருடைய மனைவி வனிதா(29). இவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் ஊழியராக வேலை செய்து வந்தார். தினமும் மொபட்டில் ஆவடி ரெயில் நிலையம் வந்து, அங்கிருந்து மின்சார ரெயிலில் சென்னைக்கு வேலைக்கு செல்வது வழக்கம்.

நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மொபட்டில் ஆவடி ரெயில் நிலையம் சென்று கொண்டிருந்தார். ஆவடி எச்.வி.எப். சாலை சந்திப்பில் சி.டி.எச். சாலையில் திரும்பும்போது பின்னால் சவுடு மண் ஏற்றிவந்த லாரி எதிர்பாராதவிதமாக அவரது மொபட் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த வனிதா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய வனிதா, உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்துக்கு புலனாய்வு பிரிவு போலீசார், பலியான வனிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான ஆவடியை சேர்ந்த கார்த்திகைபாலன் (49) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story