சென்னை வடபழனி சொகுசு ஓட்டலில் உல்லாச அழகியுடன் தங்கி இருந்த மின்வாரிய அதிகாரி மர்மச்சாவு
சென்னை வடபழனி சொகுசு ஓட்டலில் உல்லாச அழகியுடன் தங்கி இருந்த மின்வாரிய அதிகாரி மர்மமான முறையில் இறந்தார்.
கோயம்பேடு,
சென்னை அம்பத்தூர் பட்டரவாக்கத்தைச்சேர்ந்தவர் குமரேசன்(வயது 57). இவர், அம்பத்தூரை அடுத்த அத்திப்பேடு பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு குமரேசன், சென்னை வடபழனி 100 அடி சாலையில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார். அவருடன் உல்லாச அழகி ஒருவரும் தங்கி இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நள்ளிரவில் குமரேசன், அவர் தங்கி இருந்த அறையில் திடீரென மயங்கி விழுந்து மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து வடபழனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்வாரிய அதிகாரி எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. அவர் எதற்காக வடபழனியில் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்? என்பது தெரியவில்லை.
இது குறித்து அவருடன் அறையில் தங்கி இருந்த உல்லாச அழகியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story