கீழக்கரையில் வனத்துறையினர் அதிரடி சோதனை: 40 கிலோ கடல் அட்டைகளுடன் 5 பேர் கைது
கீழக்கரையில் வனத்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 40 கிலோ கடல் அட்டைகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீழக்கரை,
கீழக்கரை கடற்கரை பகுதியில் கடல்அட்டை பிடித்து வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கீழக்கரை வனச்சரகர் சிக்கந்தர்பாட்சா உத்தரவின்பேரில் வனவர் சுதாகர், வனக்காப்பாளர் ராஜேந்திரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கீழக்கரை கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வல்லம் படகில் இருந்த 4 பேரை பிடித்து சோதனையிட்டபோது படகில் தடைசெய்யப்பட்ட கடல்அட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 40 கிலோ எடையுள்ள 150 கடல்அட்டைகளையும், வல்லத்தையும் பறிமுதல் செய்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கீழக்கரை மொட்டபிள்ளை பகுதியை சேர்ந்த செய்யது அகமது கபீர்(வயது 55), வேளானூர் முத்துச்சாமி(48), கீழக்கரை தச்சர்தெரு சீனி ஹசனா(42), புதுகிழக்குத்தெரு முகமது பாரூக்(60) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இவர்களிடம் நடத்திய மேல் விசாரணையில் கீழக்கரை பரதர் தெருவை சேர்ந்த படகு உரிமையாளர் அக்பர்அலி(45) என்பவருக்காக கடல் அட்டைகளை பிடித்து வந்ததாக தெரிவித்தனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அக்பர்அலியையும் வனத்துறையினர் கைது செய்தனர். ஏற்கனவே அக்பர்அலி மீது கடல்அட்டை கடத்தியது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதும், கடல்அட்டை மொத்த வியாபாரியாக செயல்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. பிடிபட்ட 5 பேரும் ராமநாதபுரம் கோர்ட்டில் நீதிபதி இசக்கியப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு அவருடைய உத்தரவின்பேரில் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story