சட்ட விரோதமாக துப்பறியும் நிறுவனம் நடத்தி வந்த 4 பேர் கைது


சட்ட விரோதமாக துப்பறியும் நிறுவனம் நடத்தி வந்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 1 Feb 2018 10:37 AM IST (Updated: 1 Feb 2018 10:37 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோதமாக துப்பறியும் நிறுவனம் நடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தானே,

தானே கல்வா சிவாஜி நகரில் சிலர் அனுமதி பெறாமல் துப்பறியும் நிறுவனம் நடத்தி வருவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கல்வா நானாநானி பார்க் பகுதியை சேர்ந்த முகேஷ்(வயது42), கோபர்கைர்னே பகுதியை சேர்ந்த பிரசாந்த்(49), கிர்காவை சேர்ந்த ஜிகர் மக்வானா(35), தானேயை சேர்ந்த சம்ரேஷ் (32) ஆகிய 4 பேர் சட்டவிரோதமாக துப்பறியும் நிறுவனம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் செல்போன் அழைப்புகள் விபரங்கள் அடங்கிய 178 பைல்கள், 3 கம்ப்யூட்டர், 11 செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இவர்களுடன் தொடர்புடைய மேலும் 3 பேரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story