ஜவுளி நிறுவனத்தில் கவரில் பணம் இருப்பது தெரியாமல் எரித்த மர்மநபர்கள் போலீசார் விசாரணை
வாகன உதிரிபாகம் விற்பனை கடை மற்றும் லாரி பட்டறையில் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும் ஜவுளி நிறுவனத்தில் பணம் இருப்பது தெரியாமல் கவரை எரித்துள்ளனர். இது தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கரூர் அருகே சேலம் புறவழிச்சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் லாரிகள் பட்டறை மற்றும் வாகன உதிரிபாகம் விற்பனை கடைகள் பல உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரி பட்டறை மற்றும் அலுவலகங்களில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றனர். இந்த நிலையில் அதே பகுதியில் மீண்டும் திருட்டு சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்துள்ளது.
இதில் அப்பகுதியில் உள்ள தமிழ்செல்வன் என்பவருடைய வாகன உதிரிபாகம் விற்பனை கடையில் உள்ள ஜன்னலின் கீழ் பகுதியில் துளையிட்டு, உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த ரூ.4 ஆயிரத்தை திருடிச்சென்றனர். இதேபோல் கார்த்தி என்பவருடைய லாரி பட்டறை அலுவலகத்தில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் இரும்பு டிராயரை உடைத்து பார்த்துள்ளனர். அதில் பணம் எதுவும் இல்லாததால் மர்மநபர்கள் ஏமாற்றமடைந்தனர்.
அதே பகுதியில் உள்ள மற்றொரு பட்டறையிலும் கதவின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர். பட்டறைகள் இருக்கும் இடத்தின் அருகே அரிக்காரம்பாளையத்தில் ஒரு ஜவுளி நிறுவனத்திலும் மர்மநபர்கள் புகுந்து தங்களது கைவரிசையை காட்டி உள்ளனர். நேற்று காலை ஜவுளி நிறுவன ஊழியர்கள் நேற்று காலை பணிக்கு வந்தபோது ஒரு அறையில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
மேலும் மேஜை உடைக்கப்பட்டு அதன் அருகே ரூ.500, ரூ.100 தாள்கள் பாதி எரிந்த நிலையில் கிடந்தன. தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக பணத்தை தனித்தனியாக ஒரு கவரில் போட்டு நிறுவனத்தினர் வைத்திருந்தனர். ஆனால் மேஜை டிராயரில் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், கவரை எரித்துள்ளனர். ஆனால் அதில் பணம் இருந்ததை மர்மநபர்கள் கவனிக்காமல் எரித்துள்ளனர், என்பது தெரியவந்தது. தீயில் பாதி எரிந்த நிலையில் ஒரு சில ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருந்தன. சில நோட்டுகள் முற்றிலும் எரிந்துள்ளன. மொத்தம் இருந்த பண விவரம் உடனடியாக தெரியவில்லை.
வாகன உதிரி பாகம் விற்பனை கடை உள்பட 4 இடங்களில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் நடப்பதாகவும் அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்த திருட்டு சம்பவங்களில் ஒரே கும்பல் தான் ஈடுபட்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அடுத்தடுத்து சென்று அவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஜவுளி நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளது. அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் திருட்டு சம்பவம் அப்பகுதியில் கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story