தண்டராம்பட்டில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை


தண்டராம்பட்டில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Feb 2018 4:15 AM IST (Updated: 2 Feb 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

தண்டராம்பட்டில் காலாவதியான உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

தண்டராம்பட்டு,


தண்டராம்பட்டு பகுதியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் விற்கப்படும் உணவு பொருட்கள் தரமற்று இருப்பதாகவும், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருதாகவும், கலெக்டர் கந்தசாமிக்கு புகார்கள் வந்தது.

அதைத்தொடர்ந்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் தண்டராம்பட்டு உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் கைலாஷ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள், தண்டராம்பட்டில் உள்ள ஓட்டல்கள், குளிர்பான கடைகள், பேக்கரி உள்ளிட்டவற்றில் சோதனை நடத்தினர்.

அப்போது பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்கள், குளிர்பானங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இதுதொடர்பாக 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.


இதுகுறித்து அதிகாரிகள் செந்தில்குமார், கைலைஷ்குமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், ‘உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கண்டிப்பாக உணவு பொருட்களை உரிமம் பெற்றே விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். இதனால் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் வசூலிக்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே, வியாபாரிகள் உரிய உரிமம் பெற வேண்டும்’ என்றனர்.


Next Story