மணல் கடத்தல்; 7 பேர் கைது
மணல் கடத்தியதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த வளத்தோட்டம் பாலாற்று படுகையில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக மாகரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசனுக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி அவர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றார். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியது தெரியவந்தது.
அதையொட்டி வளத்தோடடம் காலனி பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (வயது 52), பொன்னுரங்கம் (65), விஜயராகவன் (45), துரைராஜ் (63), வரதன் (55), வளத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த இந்திரன் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
திம்மவரம்பேட்டை
இதேபோல் வாலாஜாபாத் அடுத்த திம்மவரம்பேட்டை பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வாலாஜாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகருக்கு தகவல் வந்தது. அதையொட்டி அவர் அந்த பகுதிக்கு போலீசாருடன் விரைந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய வீரப்பராஜாம்பேட்டையை சேர்ந்த லக்னகுமார் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story