கோழித்தீவன மூலப்பொருட்கள் வாங்கியதில் ரூ.89¾ லட்சம் மோசடி செய்தவர் கைது
நாமக்கல்லில் கால்நடை டாக்டர் என கூறி கோழித்தீவன மூலப்பொருட்கள் வாங்கியதில் ரூ.89¾ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்,
நாமக்கல் ரெட்டிப்புதூர் பெருமாள் கோவில் மேடு பகுதியில் பிரதீப் ராஜா ஏஜென்சி என்ற பெயரில் ஏஜென்சி நடத்தி வருபவர் மோகன்குமார் (வயது50). இவர் தனது ஏஜென்சி மூலம் கோழித்தீவன மூலப்பொருட்கள் விற்பனை மற்றும் கமிஷன் அடிப்படையில் முட்டை சப்ளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ராஜ்குமார் (42) என்பவர் இவரை சந்தித்து உள்ளார். அப்போது தன்னை கால்நடை டாக்டர் என அறிமுகம் செய்து கொண்ட ராஜ்குமார், நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் ஆர்டர் வந்து இருப்பதாகவும் கூறி உள்ளார். அதற்கான ஆவணங்கள் சிலவற்றையும் காண்பித்து உள்ளார். இதை உண்மை என நம்பிய மோகன்குமார் அவருக்கு கோழித்தீவன மூலப்பொருட்களை வினியோகம் செய்து வந்தார்.
இந்த நிலையில் மோகன்குமார் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்கள் மற்றும் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதங்களில் ராஜ்குமாருக்கு கோழித்தீவன மூலப்பொருட்கள் அனுப்பிய வகையில் ரூ.89 லட்சத்து 87 ஆயிரத்து 111 நிலுவை இருப்பதாகவும், அதை தராமல் மோசடி செய்து வருவதாக கூறி இருந்தார்.
மேலும் அந்த மனுவில் ராஜ்குமார் கால்நடை டாக்டருக்கு படிக்கவில்லை என்றும், வெளிநாடுகளில் அவருக்கு முட்டை ஆர்டர் வந்து இருப்பது போல அவர் காட்டிய ஆவணங்கள் அனைத்தும் போலி என்பதும் தெரியவந்து இருப்பதாக கூறி இருந்தார். அத்துடன் மோசடி செய்த பணத்தை திருப்பி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறிஇருந்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோகன்குமாரிடம் கோழித்தீவன மூலப்பொருட்கள் பெற்றுக்கொண்டு ரூ.89 லட்சத்து 87 ஆயிரத்து 111 மோசடி செய்த ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் ராஜ்குமார் கால்நடை படிப்பை நிறைவு செய்யாமல், மேலும் சிலரிடம் கால்நடை டாக்டர் கூறி மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து போலீசார் ராஜ்குமார் யார்? யாரிடம் எல்லாம் ஏமாற்றி உள்ளார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story