கடனை தள்ளுபடி செய்யக்கோரி 23-ந் தேதி முதல் டெல்லியில் காலவரையற்ற முற்றுகை போராட்டம்
விவசாய கடனை முற்றிலுமாக தள்ளுபடி செய்யக்கோரி, 23-ந் தேதி முதல் டெல்லியில் காலவரையற்ற முற்றுகை போராட்டம் நடத்துவது என்று விவசாய அமைப்புகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மலைக்கோட்டை,
விவசாய கடனை முற்றிலுமாக தள்ளுபடி செய்யக்கோரி தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட 69 அகில பாரத விவசாய அமைப்புகள், டெல்லியில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளன. அப்போராட்டத்தை வெற்றியடைய செய்வதற்கான ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழகம் மற்றும் ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்யவேண்டும். விவசாயிகள் வாங்கிய அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்தியஅரசு நிறைவேற்றும் வரை காலவரையற்ற முற்றுகை போராட்டத்தை நடத்தி, டெல்லியின் அனைத்து சாலைகளையும், 3 லட்சம் விவசாயிகளை கொண்டு அடைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தில் திருச்சி மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து விவசாயிகளை பங்கெடுக்க செய்வது என்று கூட்டத்தில் உறுதி எடுத்தனர்.
இதில் ராஷ்ட்ரீய கிசான் மகா சங்க அமைப்பாளர் சந்வீர்சிங், கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் பிஜூ, தேசிய தன்மான இயக்கத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.
பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறுகையில், “ரூ.24 லட்சம் கோடி மத்திய பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் இல்லை. எனவே விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி வருகிற 23-ந் தேதி முதல் டெல்லியின் அனைத்து சாலைகளையும் அடைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்” என்றார்.

Related Tags :
Next Story