31 பேரிடம் ரூ.6 கோடி மோசடி வக்கீல், மனைவி கைது


31 பேரிடம் ரூ.6 கோடி மோசடி வக்கீல், மனைவி கைது
x
தினத்தந்தி 7 Feb 2018 4:42 AM IST (Updated: 7 Feb 2018 4:42 AM IST)
t-max-icont-min-icon

மும்பை சார்க்கோப் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். வக்கீல். இவரது மனைவி சோனாலி. கட்டுமான அதிபரான இவர், வீடு கட்டி தருவதாக கூறி 31 பேரிடம் ரூ.6 கோடி வரை கறந்தார்.

மும்பை,

வீடு கட்டி தராமல், கணவருடன் தலைமறைவாகி விட்டார். இதனால், பாதிக்கப்பட்ட நபர்கள், இதுபற்றி போலீசில் புகார் செய்தனர்.

இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்– மனைவி இருவரையும் வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில், அவர்கள் வசாய் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக சார்க்கோப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், உள்ளூர் போலீஸ் உதவியுடன், இருவரையும் சார்க்கோப் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.


Next Story