பாதுகாப்பற்ற நிலையில் உள்ள அரசு பள்ளி மேற்கூரை சீரமைப்பு பணியை மேற்கொள்ள வலியுறுத்தல்


பாதுகாப்பற்ற நிலையில் உள்ள அரசு பள்ளி மேற்கூரை சீரமைப்பு பணியை மேற்கொள்ள வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Feb 2018 4:00 AM IST (Updated: 9 Feb 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

பேரையூர் அருகே பாதுகாப்பற்ற நிலையில் உள்ள அரசு பள்ளியின் மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பேரையூர்,

பேரையூர் அருகே உள்ளது சந்தையூர். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை 230 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்கள் படிக்கும் பள்ளி கட்டித்தின் மேற்கூரையில் ஆங்காங்கே ஓடுகள் உடைந்தும், ஓடுகள் இல்லாமலும் ஓட்டை உடைசலாக உள்ளது.

பாதுகாப்பற்ற நிலையில் பள்ளியின் மேற்கூரை இருப்பதால் ஆசிரியர்கள், மாணவர்களை வேறு வகுப்பிற்கு மாற்றி வருகின்றனர். ஆனால், இந்த ஓட்டை உடைசல் கட்டிடத்தில் தான் ஆசிரியர்கள் தங்கி வருகின்றனர். மேலும் வேறுவழியின்றி மாணவர்களும் இந்த கட்டித்தை பயன்படுத்தி வருகின்றனர்.

சீரமைப்பு

இந்தநிலையில் எப்போது மேற்கூரையில் உள்ள ஓடுகள் விழும் என்ற பயத்திலேயே ஆசிரியர்களும், மாணவர்களும் உள்ளனர். இதுகுறித்து பள்ளி தலைமையசிரியர் டி.கல்லுப்பட்டி யூனியன் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுவரை பள்ளி கட்டிட மேற்கூரை மாற்றப்படுவதாகவும் தெரியவில்லை.

ஆகையால், மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நலன்கருதி பள்ளிக்கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள ஓடுகளை சீரமைக்க வேண்டும். அதனை விரைவில் செய்தால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமலும், யாருக்கும் பாதிப்பு இல்லாமலும் இருக்கும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story