காஞ்சீபுரத்தில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காந்தி ரோடு, மூங்கில் மண்டபத்தில் இருந்து கீரை மண்டபம் செல்லும் ரோடு ஆகியவை ஒருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரும். அதாவது காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த சாலைகள் ஒரு வழிப்பாதையாக செயல்படும். இந்த நேரங்களில் மேட்டுத்தெருவில் இருந்து காந்தி ரோடு வழியாக தேரடிக்கு செல்பவர்கள் மட்டுமே செல்ல முடியும். தேரடியில் இருந்து மேட்டுத்தெருவுக்கு வருபவர்கள் விளக்கடி கோவில் தெரு வழியாக வரவேண்டும்.
மேலும் பஸ் நிலையத்தில் இருந்து கீரை மண்டபம் செல்லக்கூடியவர்கள் மூங்கில் மண்டபம் வந்து காந்தி ரோடு, விளக்கடி கோவில் தெரு வழியாக கீரை மண்டபத்திற்கு செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.