16-ந் தேதி பாம்பன் பாலத்தை முற்றுகையிடும் போராட்டம்


16-ந் தேதி பாம்பன் பாலத்தை முற்றுகையிடும் போராட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2018 3:30 AM IST (Updated: 10 Feb 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வருகிற 16-ந் தேதி பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என 6 மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகை அக்கரைப்பேட்டை நாட்டா நகரில், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்கால், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் விலையை குறைக்க வேண்டும். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 185 விசைப்படகுகளையும், சிறைபிடிக்கப்பட்ட 150 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும். எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு அளவுக்கு அதிகமான அபராதம் என்ற சட்ட மசோதாவை இலங்கை அரசு வாபஸ் பெற வேண்டும்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் 2009-ம் ஆண்டு முதல் இன்று வரை மரபு வழி மீன்பிடித்தொழில் செய்யக்கூடிய மாருதி கட்டுமர மீனவர்களை அடித்தும் துன்புறுத்தியும், பிடித்து வைத்த மீன்கள் மற்றும் வலைகளை சேதப்படுத்தி வருகின்றனர். இதனை கண்டிக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வருகிற 16-ந் தேதி(வெள்ளிக்கிழமை) ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 6 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மீனவ பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

Next Story