தமிழகத்தில் வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்
தமிழகத்தில் வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்று உழவர் பேரியக்க கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
தர்மபுரி,
தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தர்மபுரி குண்டல்பட்டியில் உள்ள டி.என்.ஜி. தங்கும் விடுதி கூட்டஅரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு உழவர் பேரியக்க மாநில செயலாளர் இல.வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாநில துணைச்செயலாளர் சின்னசாமி வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர்கள் அய்யப்பன், முருகேசன், மாவட்ட தலைவர்கள் முத்துசாமி, பெரிச்சி கவுண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு உழவர் பேரியக்க நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் வேளாண்மை தொழில் அழியும் நிலை ஏற்பட்டு வருகிறது. வறட்சி காரணமாக தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாத பலர் மாற்று தொழிலுக்கு சென்று வருகிறார்கள். வேளாண்மை தொழிலை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இப்போது உருவாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகள் வறண்டு காணப்படுகின்றன. அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தர மறுக்கின்றன. இந்த சூழ்நிலையில் தமிழக விவசாயிகளின் ஜீவாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் உழவர் பேரியக்கம் உறுதுணையாக இருந்து போராட வேண்டும்.
மத்திய,மாநில அரசுகள் கரும்பு, நெல் ஆகிய பயிர்களுக்கு விலை நிர்ணயம் செய்வது போன்றே அனைத்துவிதமான விவசாய விளைபொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழகத்தில் அனைத்து துறைகளுக்கும் ஒரே பட்ஜெட் என்ற நிலையை மாற்றி வேளாண்மை துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் நீர்வள ஆதாரங்களை பெருக்கிட தென்பெண்ணையாற்றில் இருந்து உபரி நீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு கொண்டுவரும் எண்ணேகொல்புதூர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தன்ராஜ், மாநில துணை தலைவர் சாந்தமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் சண்முகம், இமயவர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்ஆலோசனைக்கூட்டம், மாநில துணைபொதுச்செயலாளர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையிலும், தமிழ்சமூக ஊடகப்பேரவை பொறுப்பாளர்கள் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தயாளன் தலைமையிலும், பாட்டாளி மாணவர் சங்க பொறுப்பாளர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் சபரி, மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையிலும், பட்டதாரி இளம்பெண்கள் சங்க ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளர் செல்வி தலைமையிலும் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

Related Tags :
Next Story