பிவண்டியில் கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு 3 பேர் கைது


பிவண்டியில் கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Feb 2018 4:20 AM IST (Updated: 10 Feb 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

பிவண்டியில் கத்திமுனையில் இளம்பெண்ணை கற்பழித்த வாலிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தானே,

மும்பை சாந்திநகரை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது அவரது வீட்டுக்கு அந்த பகுதியை சேர்ந்த இம்ரான்கான் (வயது24), ஜாவேத் சேக் (23), கின்னா (20) ஆகிய 3 பேர் வந்தனர்.

அவர்களில் இம்ரான்கான் இளம்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர் அவர் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண்ணை கற்பழித்து உள்ளார்.

அவரது நண்பர்கள் இருவரும் யாரும் வந்தால் தகவல்கொடுப்பதற்காக வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்து உள்ளனர். பின்னர் 3 பேரும் அங்கிருந்து ஓடி விட்டனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சம்பவம் குறித்து சாந்திநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.

Next Story