பிம்பிரி ரெயில் நிலையத்தில் பச்சிளம் பெண் குழந்தை மீட்பு


பிம்பிரி ரெயில் நிலையத்தில் பச்சிளம் பெண் குழந்தை மீட்பு
x
தினத்தந்தி 10 Feb 2018 4:24 AM IST (Updated: 10 Feb 2018 5:53 AM IST)
t-max-icont-min-icon

புனே அருகே பிம்பிரி ரெயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் உள்ள ஒரு இருக்கையில் நேற்று துணியால் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று அனாதையாக கிடந்தது.

புனே,

 நீண்ட நேரமாக அழுதும் அந்த குழந்தையை எடுத்துச்செல்ல யாரும் வரவில்லை. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த நீலம் கெய்க்வாட் என்ற பெண் அந்த குழந்தையை மீட்டு பிம்பிரி ரெயில்வே போலீசில் ஒப்படைத்தார். போலீசார் குழந்தையை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை ரெயில் நிலையத்தில் விட்டு சென்றது யார் என்பதை கண்டுபிடிக்க ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சியை பார்வையிட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Next Story