தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 2 போலீசார் பணி இடைநீக்கம்
தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 2 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை,
மும்பை பன்னாட்டு விமானநிலையத்தில் குடியுரிமை பிரிவில் பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஞானோபா வாக்மோதே, போலீஸ்காரர் சந்தீப் ஆகியோர் சில பயணிகளிடம் மர்ம உலோக பொருட்களை வாங்குவது போன்ற காட்சிகள் விமான நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து நடந்த விசாரணையின் போது போலீஸ்காரர் சந்தீப்பின் ‘வாட்ஸ் அப்’பில், அவரிடம் மர்மபொருளை கொடுத்த பயணியின் புகைப்படம் மற்றும் அவரது விமான பயண விவரம் இருந்தது.
எனவே போலீஸ்காரர்கள் 2 பேரும் தங்க கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story