போலீஸ்காரரை தாக்கி பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது
மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வருபவர் போலீஸ்காரர் ஸ்ரீகாந்த். நாகுர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பணி முடிந்து காரில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
மும்பை,
சுபாஷ்நகர் அருகே சென்ற போது 3 பேர் போலீஸ்காரரின் காரை வழிமறித்தனர். மேலும் அவரை மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். அப்போது ஸ்ரீகாந்த் தான் ஒரு போலீஸ்காரர் என கூறி அவர்களை பிடிக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் போலீஸ்காரர் ஸ்ரீகாந்தை தாக்கிவிட்டு அங்கு இருந்து தப்பி ஓடினர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்த ஸ்ரீகாந்தை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், போலீஸ்காரரை தாக்கி பணம் பறிக்க முயற்சி செய்ததாக சுபாஷ்நகர் பகுதியை சேர்ந்த ஆசிப், ராகுல், கிஷோர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மதுபோதையில் போலீஸ்காரரை தாக்கி பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது.

Related Tags :
Next Story