பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டி சிவன் கோவிலில் சிறப்பு யாகம்
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டி கோடாலி கருப்பூர் சிவன் கோவிலில் சிறப்பு யாகம்
தா.பழூர்,
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதில் பொதுத்தேர்வை சந்திக்க உள்ள மாணவர்கள் தேர்வில் தேர்ச்சியடைந்து, அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு கடும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தங்களது பள்ளிகள் மாநில அளவில் முதலிடம் பிடித்து, மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிகளும் தங்களுக்குள் போட்டி போட்டு வருகின்றன. இந்நிலையில் அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் கோடாலி கருப்பூர் ஞானகுரு திருமூலர் அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அக்கிராமத்திலுள்ள அரசுமேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, அதிக மதிப்பெண்கள் பெறவேண்டி, சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு நடத்தி வருகின்றனர். அதன்படி கோடாலிகருப்பூர் மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் கோவிலில் நேற்று காலை சிறப்பு யாகம் நடைபெற்றது. அப்போது வழிபாட்டு குழுவினர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதைத் தொடர்ந்து சொக்கநாதர் மற்றும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்தாண்டு நடைபெற்ற பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கி அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். நிறுவனர் விசுவநாதன், பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் தமிழ் மாறன் பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை குழு நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுக்கான எழுதுபொருட்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப் பட்டது.

Related Tags :
Next Story