சரக்கு வேனில் பசுமாடுகள் கடத்தல்: துரத்தி சென்ற தந்தை-மகன் மீது தாக்குதல் 3 பேர் கைது
சரக்கு வேனில் பசுமாடுகள் கடத்தி சென்றவர்களை துரத்தி சென்ற தந்தை - மகனை சரமாரியாக தாக்கினர். இதுதொடர்பாக அரசு பஸ் டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடியாத்தம்,
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த கொசவன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன் (வயது 54), விவசாயி. இவர், தனது வீட்டின் அருகே உள்ள நிலத்தில் கொட்டகை அமைத்து 8 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் 10-ந் தேதி நள்ளிரவில் சரக்கு வேனில் வந்த மர்ம நபர்கள் கண்ணையன் கொட்டகைக்கு அருகே புதர் மறைவில் வண்டியை நிறுத்தி உள்ளனர்.
பின்னர் அங்கிருந்த 4 பசு மாடுகளை அவிழ்த்து சென்று அதனை சரக்கு வேனில் ஏற்றி உள்ளனர். பசு மாடுகளின் சத்தம் கேட்டு கண்ணையன் மற்றும் அவரது மகன் கார்த்தி (24) ஆகியோர் கொட்டகைக்கு வந்துள்ளனர். அப்போது கொட்டகையில் 4 பசு மாடுகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே அருகே உள்ள நிலத்தில் தேடியபோது இருட்டில் அங்கிருந்து சரக்கு வேன் வேகமாக சென்றது. வேனில் இருந்து பசுமாடுகள் கதறும் சத்தம் கேட்டுள்ளது.
இதனையடுத்து கண்ணையனும், அவரது மகனும் மோட்டார் சைக்கிளில் வேனை விரட்டி சென்றுள்ளனர். அர்ஜூனாபுரம் அருகே வேனை மடக்கியபோது அதில் இருந்தவர்கள் ஆயுதங்களால் கண்ணையன் மற்றும் கார்த்தியை தாக்கி உள்ளனர். இதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அதைத் தொடர்ந்து மர்ம நபர்கள் பசு மாடுகளுடன் அங்கிருந்து சென்றனர். சென்னங்குப்பம் அருகே வேன் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனையடுத்து வேனில் இருந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த விபத்தில் வேனில் இருந்த 4 பசு மாடுகளும் காயம் அடைந்தன.
மர்ம நபர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த கண்ணையன் மற்றும் கார்த்தி ஆகியோர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆற்காடு பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பழனி (30), மணிகண்டன், நந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
விபத்தில் காயம் அடைந்த 4 மாடுகளில் ஒரு மாடு காயத்துடன் நள்ளிரவில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது உரிமையாளர் கொட்டகைக்கு வந்து சேர்ந்தது.

Related Tags :
Next Story