ரெயில்வேயில் 63 ஆயிரம் பணிகள்


ரெயில்வேயில் 63 ஆயிரம் பணிகள்
x
தினத்தந்தி 14 Feb 2018 10:38 AM IST (Updated: 14 Feb 2018 10:38 AM IST)
t-max-icont-min-icon

மத்திய ரெயில்வே துறையில் ‘குரூப்-டி’ பணியிடங்களை நிரப்ப ரெயில்வே தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 62 ஆயிரத்து 907 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

 தண்டவாள பராமரிப்பாளர், டிராக்மேன், கேட்மேன், பாயிண்ட்ஸ்மென், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிக்னல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது. அந்தந்த மண்டலத்தில் உள்ள காலியிட விவரம், இட ஒதுக்கீடு விவரம், பணியிடங்கள் விவரம் ஆகியவை இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்து என்.ஏ.சி., என்.சி.வி.டி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு ஏராளமான பணிகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 1-7-2018 தேதியில் 31 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கும் குறிப்பிட்ட பணியிடங்கள் உள்ளன. பெரும்பாலான பணிகளுக்கு உடற் தகுதி மருத்துவ பரிசோதனையின் மூலம் சோதிக்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

12-3-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். விரிவான விவரங்களை அந்தந்த ரெயில்வே மண்டல இணையதள பக்கத்தில் பார்க்கலாம். தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த தமிழக விண்ணப்பதாரர்கள் www.rrbchennai.gov.in    என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

Next Story