ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட ‘சிவில் சர்வீஸ்’ பணிகளுக்கு 892 இடங்கள்


ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட ‘சிவில் சர்வீஸ்’ பணிகளுக்கு 892 இடங்கள்
x
தினத்தந்தி 14 Feb 2018 11:00 AM IST (Updated: 14 Feb 2018 11:00 AM IST)
t-max-icont-min-icon

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எப்.எஸ். பணிகளுக்கு 892 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த பணிகளுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக யூ.பி.எஸ்.சி. என அழைக்கப்படு கிறது. இந்த அமைப்பு மத்திய அரசின் பல்வேறு உயர் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அமைப்பாக செயல்படுகிறது. தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை பணி நிய மனம் செய்து வருகிறது.

தற்போது சிவில் சர்வீஸ் எனப்படும் இந்திய குடிமைப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 வகையான உயர் பதவிகளை உள்ளடக்கிய இந்த பணிகளில் சேர, இளைஞர்கள் பெரிதும் விரும்புவார்கள். அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் இந்த வருடம் 782 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் மாற்று திறனாளிகளுக்கும் கணிச மான பணிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

முதல்நிலை எழுத்து தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய தேர்வுமுறைகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண் வழங்கப்படும்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-8-2018 தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 2-8-1986 மற்றும் 1-8-1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். ஊனமுற்றோருக்கும் பிரிவுக்கு ஏற்ப வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில், ஏதேனும் ஒரு பிரிவில் குறைந்தபட்சம் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் :

பெண் விண்ணப்பதாரர்கள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தவிர்த்த மற்றவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையிலும், குறிப்பிட்ட வங்கிகளில் நேரடியாகவும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பார்ட் 1, பார்ட் 2 என இரு நிலைகளில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். முன்னதாக புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றுகளை குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். தேவையான இடத்தில் அவற்றை பதிவேற்றம் (அப்லோடு) செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க 6-3-2018-ந் தேதி மாலை 6 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 3-6-2018 அன்று நடைபெறுகிறது. முதன்மைத் தேர்வு (மெயின் எக்ஸாம்) செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஐ.எப்.எஸ். பணிக்கு 110 இடங்கள்

இதேபோல இந்திய வனத்துறை சேவை பணியிடங்களான ஐ.எப்.எஸ். பணிகளுக்கு 110 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-8-2018 தேதியில் 21 முதல் 32 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். அனிமல் ஹஸ்பண்டரி, வெட்னரி சயின்ஸ், பாட்டனி, கெமிஸ்ட்ரி, ஜியாலஜி, மேத்தமேட்டிக்ஸ், பிசிக்ஸ், ஸ்டாட்டிஸ்டிக்ஸ், ஷூவாலஜி, அக்ரிகல்சர், பாரஸ்ட்ரி போன்ற பட்டப்படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி, 6-3-2018-ந் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இவை பற்றிய விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

Next Story