அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்


அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2018 4:00 AM IST (Updated: 15 Feb 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

மணிமாலா சாவுக்கு காரணமான டாக்டரை கைது செய்யக்கோரி திருப்பூர், ஈரோடு, மாவட்டங்களில் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தவர் மணிமாலா(வயது 23). இவர் கடந்த வாரம் பணிக்கு வரவில்லை என்று கூறி அங்கு பணியாற்றிய டாக்டர் ஒருவர் அவருக்கு மெமோ கொடுத்தார். இதையடுத்து கடந்த 10-ந் தேதி மணிமாலா தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு காரணமான டாக்டரை கைது செய்யக்கோரி திருப்பூர், ஈரோடு, மாவட்டங்களில் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் கருப்புபேட்ஜ் அணிந்து 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல் நேற்று காலை 8 மணி முதல் செவிலியர்கள் ஒருமணிநேரம் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை செயலாளர் ஜெயபாரதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சாந்தி, செயலாளர் செண்பகவள்ளி, பொருளாளர் சித்ரா மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார்கள். 

Next Story