அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி
அரும்பாவூர், சூரக்குழியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மாகா சிவராத்திரியையொட்டி மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல், சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் இருந்து காளி புறப்பாடு நடைபெற்றது. அப்போது காளி வேடமிட்டவர்கள், குழந்தைபேறு இல்லாத பெண்களும், பேய் பிடித்தவர்களும் முறத்தால் அடி வாங்கினர். அவ்வாறு முறத்தால் அடி வாங்கினால் பேய் பயத்திலிருந்து விடுபடுவார்கள் என்பது நம்பிக்கை.
தொடர்ந்து வள்ளாளன் கோட்டை இடித்தல் நிகழ்ச்சியும், குடலை உருவி மாலைப்போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான கொள்ளை நடைபெற்றது. அப்போது மயானத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரியாயி சாமி உருவத்திற்கு கீழ் அரிசி சாதம் கொட்டப்பட்டிருந்தது. அந்த சாதத்தில், கெடாவெட்டி அதன் ரத்தமிட்டு அந்த சாதத்தை அள்ளி இரைத்தனர். அப்போது பிள்ளைபேறு இல்லாத பெண்கள், மடியேந்தி ரத்தக்கரை படிந்த சாதத்தை வாங்கி சாப்பிட்டனர். அவ்வாறு சாப்பிட்டால் குழந்தையில்லாத பெண்களுக்கு குழந்தைபேறு உண்டாகும் என்பது ஐதீகம். இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதைதொடர்ந்து மயானத்திலிருந்து காளிவேடமிட்டவர்கள் ஊர்வலமாக கோவில் நோக்கி சென்றனர். அப்போது காளியிடம் பக்தர்கள் ஆடு, கோழிகளை நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் காளி ஆடு, கோழிகளை பெற்று அதன் ரத்தத்தை மருளாளி உறிஞ்சும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து இரவு சாமி வீதி உலா நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சூரக்குழி கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மயானகொள்ளை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மயான கொள்ளை திருவிழா நேற்று காலை தொடங்கியது. தொடர்ந்து அங்காள அம்மன், பாவாடைராயன் சாமிகளுக்கு மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் அங்காள பரமேஸ்வரி விஸ்வரூபம் கொண்டு நிசானி உடல் கிழித்து குடல் பிடுங்கி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அம்மன் வீதி உலா புறப்பட்டது. இதில் பக்தர்கள் பவாடராயன், அங்காளம்மன், காட்டேரி, ரத்தக்காட்டேரி, போன்று வேசமிட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலை சூரக்குழி அருகே உள்ள மயானத்திற்கு வந்தனர். அங்கு மயான கொள்ளை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story