தென்கொரியாவின் கடைசிக் கிராமத்தில்...
எல்லையில் வசிப்பது எப்போதும் தொல்லைதான். அதுவும் இந்தியா- பாகிஸ்தான், வடகொரியா- தென்கொரியா போன்ற எப்போதும் முறைத்துக்கொண்டிருக்கும் நாடுகளின் எல்லையில் வசிப்பது.
தென்கொரியாவில், வடகொரிய எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் கடைசிக் கிராமமான யோங்காமில் அதிரடி பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
கடந்த 1950-ம் ஆண்டு வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே நடைபெற்ற மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் நீண்ட சுரங்கங்கள், அணு ஆயுதத்தினாலும் பாதிப்படையாத பதுங்குகுழிகள், கண்ணிவெடிகள் என தென் கொரிய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு யோங்காம் கிராமமும் விதிவிலக்கல்ல.
இந்த எல்லையோரக் கிராமத்தில் காலை பத்தரை மணிக்கும் மயான அமைதி நிலவுகிறது. எப்போதாவது ஒருசில வாகனங்கள் மட்டும் இப்பகுதியைக் கடந்து செல்கின்றன.
யோங்காம் கிராமத்தை அடுத்து இரு நாடுகளின், ‘ராணுவக் கண்காணிப்பு இல்லாத பகுதி’ தொடங்குகிறது.
இந்தப் பகுதியில் பத்து லட்சத்துக்கும் அதிகமான நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்றால், இது எவ்வளவு அபாயகரமான பகுதி என்பது புரியும்.
இக்கிராமத்தில் உள்ள முதியோர் இல்லத்தில், முதியோர் பலர் உள்ளனர். அவர்களில் பலர், வடகொரிய- தென்கொரியப் போரின் நேரடி சாட்சிகள்.
உதாரணமாக, 90 வயதான லீ சுன் ஜா என்பவர், 1950-களில் இந்தக் கிராமத்தில் நடைபெற்ற படுகொலைகளை நேரில் கண்டவர்.
கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான முதியோர்கள் அந்தக் கொடுமைகளை மீண்டும் நினைவுகூர விரும்பவில்லை.
இளவயதினர் பெரும்பாலும் கிராமத்தைவிட்டு வெளியேறி வேறிடங்களுக்குச் சென்றுவிட்ட நிலையில், முதியவர்கள் மட்டுமே இங்கு அதிகமாக வசிக்கின்றனர்.
அவர்களிலும் ஒருசிலரைத் தவிர மற்ற எவரும் வடகொரியா பற்றிப் பேச விரும்பவில்லை. காரணம், இங்கு இருப்பவர்களின் உறவினர்கள் பலர் வடகொரியாவில் வசிக்கின்றனர். தாங்கள் சாதாரணமாகச் சொல்லும் கருத்து அங்கிருப்பவர்களை பாதிக்குமோ என்ற அச்சமே அதற்கு காரணம்.
யோங்காம் போன்ற டஜன் கணக்கான கிராமங்கள் வடகொரிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளன.
இந்தக் கிராமங்களில் எல்லாம் பெரிய அளவிலான பதுங்குகுழிகள் தயார்நிலையில் உள்ளன. இவற்றை அணு ஆயுதங்களோ, ரசாயன ஆயுதங்களோ தாக்க முடியாது என்று கூறப்படுகிறது. அதாவது எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும்வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
பதுங்குகுழிகளின் சுவர்கள் நான்கு அடிக்கும் அதிகமான தடிமனில் இரும்பு மற்றும் கான்கிரீட்டால் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலத்தடி பதுங்குகுழிகளில் வெளிச்சத்துக்கு மெழுகுவர்த்தி, டார்ச் லைட் ஆகியவையே பயன்படுத்தப்படுகின்றன. ஜெனரேட்டர்கள் எதுவும் கிடையாது.
பதுங்குகுழிகளுக்குள் பெரிய அளவிலான குளிர்சாதனப் பெட்டிகளில் மூன்று மாதங்களுக்குப் போதுமான உணவுப்பொருட்கள், கம்பளி மற்றும் யுத்த சமயத்தில் வெளியுலகத்துடன் தொடர்புகொள்ள பேட்டரியால் இயங்கும் சிற்றலை வானொலி ஆகிய வசதிகள் உள்ளன.
எல்லையோர கிராமங்களில், எச்சரிக்கை செய்வதற்காக டிஜிட்டல் திரை மற்றும் பெரிய ஒலி ஒபெருக் கிகள் எப்போதும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எல்லைக்குச் செல்லும் வழியில் கான்கிரீட் கட்டமைப்புகளை வெடிகுண்டால் தகர்த்து பாதையை மூடச்செய்யும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தென்கொரியத் தலைநகரில் இருந்து நான்கு மணி நேர பயணத் தொலைவில் இருக்கும் இந்தப் பகுதியைச் சென்றடைய பனிக்காற்று, நீண்ட சுரங்கங்கள், 10 டிகிரிக்கும் குறைவான வெப்பம் போன்ற பல கஷ்டங்களைக் கடக்கவேண்டும்.
வடகொரியா உடனான எல்லைப் பகுதியில் ஐந்து லட்சம் தென்கொரிய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பீரங்கியையே எதிர்கொண்டாலும் ஓர் அங்குலம் கூட அசையக்கூடாது. அவர்களை குறிவைத்த நிலையில் வடகொரிய பீராங்கி முனைகள் அமைந்திருக்கின்றன.
எல்லைப் பகுதி கிராமங்களுக்கு அருகில் உள்ள நகரமான சுண்டியோவில் பொதுமக்களைவிட ராணுவத்தினரின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தாலும், தென்கொரிய எல்லைக் கிராமங்களில் எப்போதும் ஒரு பதற்றம் தென்படுகிறது. வடகொரிய அதிபரின் பேச்சுகள் அந்தப் பதற்றத்தைக் கூட்டியபடியே இருக்கின்றன.

Related Tags :
Next Story