குடும்ப தகராறில் விஷம் குடித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு


குடும்ப தகராறில் விஷம் குடித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு
x
தினத்தந்தி 18 Feb 2018 3:45 AM IST (Updated: 18 Feb 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்த தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள கல்குடி கிராமம் கீழத்தெருவை் சேர்ந்தவர் ராசு. இவருடைய மகன் மோகன்ராஜ்(21). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இந்நிலையில் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மோகன்ராஜ் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

பரிதாப சாவு

இதைக்கண்ட அக்கம்பக்கத் தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மோகன்ராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story