அரசு பஸ்-கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சாவு பெலகாவி அருகே சோகம்


அரசு பஸ்-கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சாவு பெலகாவி அருகே சோகம்
x
தினத்தந்தி 17 Feb 2018 9:30 PM GMT (Updated: 17 Feb 2018 9:29 PM GMT)

பெலகாவி அருகே நேற்று இரவு அரசு பஸ்சும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பெங்களூரு,

பெலகாவி அருகே நேற்று இரவு அரசு பஸ்சும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.

5 பேர் சாவு

பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா அடஹள்ளி கிராமத்தில் நேற்று இரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த சாலையில் வந்த அரசு பஸ், கார் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் காரில் பயணித்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினார்கள்.

இதற்கிடையே, அரசு பஸ்சை அங்கேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஐகலி போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி இறந்திருப்பதும், 10 பேர் காயமடைந்து இருப்பதும் தெரியவந்தது.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

இதையடுத்து, காயமடைந்தவர்களை மீட்ட போலீசார் அதானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பலியானவர்கள் அன்னப்பா ஜாதவ் (வயது 42), அர்ச்சனா ஜாதவ் (40), ரவி ஜாதவ் (12), ராதாபாய் ஜாதவ் (50), கவுரவகோபாலா (40) என்பதும், அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும், ககமரி கிராமத்தை சேர்ந்த அவர்கள் உறவினர் ஒருவர் இறந்து போனதால் துக்கம் விசாரிக்க காரில் அவகோட் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஐகலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story