76-வது முறையாக சம்பவம்: சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி நொறுங்கியது
சென்னை விமான நிலையத்தில் 76-வது முறையாக சுவர் போல் பதிக்கப்பட்டு இருந்த கண்ணாடி நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக புதிய முனையங்கள் செயல்பட்டு வருகின்றன.
விமான நிலையத்தில் இதுவரை 15 முறை மேற்கூரைகள் இடிந்து விழுந்து உள்ளன. 25 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 27 முறை சுவர் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கி உள்ளன. 6 முறை சுவரில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்கள் பெயர்ந்து விழுந்தும், ஒரு முறை விளக்கு கண்ணாடியும், ஒரு முறை அறிவிப்பு பலகை டி.வி. என இதுவரை 75 முறை உடைந்து விழுந்து உள்ளன. இந்த உடைப்பு சம்பவங்களில் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் 76-வது முறையாக மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் புறப்பாடு பகுதியில் 4-வது நுழைவுவாயில் அருகே சுவர் போல் பதிக்கப்பட்டு இருந்த கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கி தொங்கியது.
நொறுங்கிய கண்ணாடி கீழே விழாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, “சென்னை விமான நிலையத்துக்கு வேகமாக வந்த வாகனத்தின் டயரில் சிக்கி தூக்கி வீசப்பட்ட ஏதோ ஒரு பொருள் அந்த கண்ணாடியில் பட்டு நொறுங்கி இருப்பதாக” தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கண்ணாடி நொறுங்கி விழும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story