கோவையில் பணம் கேட்டு அரிசி கடை உரிமையாளர் கடத்தல், நண்பர்கள் 4 பேர் கைது
கோவையில் பணம் கேட்டு அரிசி கடை உரிமையாளரை கடத்திய நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவை சாய்பாபாகாலனி கே.கே.புதூரை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 32). இவர் கோவை வெறைட்டிஹால் ரோடு பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். அதேபகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (33), சேரன் மாநகர் சதீஷ்குமார் (27), பொள்ளாச்சி பாரதி, ஜோதிபுரம் கார்த்திக் (24) ஆகிய 4 பேரும் ரமேஷ்குமாரின் நண்பர்கள். அவர்களுக்குள் பணம் கொடுக்கல்- வாங்கல் இருந்தது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ்குமார் தனது நண்பர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அதை அவர் திரும்ப கொடுக்கவில்லை. இந்த பணத்தை அவர்கள் பலமுறை கேட்டும் கிடைக்காததால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் 4 பேரும் சேர்ந்து ரமேஷ்குமாரை கடத்தி பணத்தை வசூலிக்க திட்டமிட்டனர். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி ரமேஷ்குமார் பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகருக்கு சென்றார். அங்கு அவரை சந்தோஷ்குமார், சதீஷ்குமார் ஆகியோர் சந்தித்து, நமக்குள் இருக்கும் பிரச்சினைகளை மறந்துவிட்டு இனிமேல் நண்பர்களாக இருப்போம் என்று கூறினார்கள். அதை ரமேஷ்குமாரும் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர்கள் அங்குள்ள ஒரு கடையில் அமர்ந்து சிறிது நேரம் பேசினார்கள். பிறகு அவர்கள் 2 பேரும் பொள்ளாச்சியில் சிறிய வேலை இருக்கிறது, வா போகலாம் என்று ரமேஷ்குமாரிடம் கூறினர். அவரும் சரி என்று புறப்பட்டார். அப்போது காருக்குள் பாரதி, கார்த்திக் ஆகியோர் இருந்தனர். ரமேஷ்குமார் காருக்குள் ஏறியதும் 4 பேரும் சேர்ந்து அவரை கடத்தினார்கள்.
பின்னர் அவரை பொள்ளாச்சியில் உள்ள பாரதியின் தோட்டத்துக்கு கொண்டு சென்று, அங்குள்ள அறையில் அடைத்து ரூ.50 ஆயிரம் கேட்டு அடித்து உதைத்தனர். அவர் விரைவில் தந்துவிடுவதாக கூறியும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் 16-ந் தேதி காலையில் அவர்கள் 4 பேரும் குடிபோதையில் இருந்தபோது, அங்கிருந்து ரமேஷ்குமார் நைசாக தப்பித்து கோவை வந்தார்.
பிறகு அவர் இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமார், சதீஷ்குமார், பாரதி மற்றும் கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story