தஞ்சை வழியாக செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்களின் எண்கள் மாற்றம்


தஞ்சை வழியாக செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்களின் எண்கள் மாற்றம்
x
தினத்தந்தி 19 Feb 2018 3:45 AM IST (Updated: 19 Feb 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மற்றும் தஞ்சை வழியாக செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சையில் இருந்து சென்னைக்கு உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16184) இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் மறுமார்க்கமான சென்னையில் இருந்து தஞ்சைக்கு (வண்டி எண் 16183) ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் திருச்சியில் இருந்தும், சென்னையில் இருந்தும் தஞ்சை வழியாக சோழன்எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16854, 16853) இயக்கப் படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து ராமேசுவரத்துக்கும் தஞ்சை வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (வண்டி எண்கள் 16102, 16101) இயக்கப்படுகிறது. தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் இயக்கப்படும் இந்த 3 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் எண்களும் மாற்றம் செய்யப்படுகிறது.

1-ந்தேதி முதல் அமல்

தஞ்சையில் இருந்து செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 168656), சென்னையில் இருந்து தஞ்சை வரும் ரெயில் (வண்டி எண் 16865) என மாற்றம் செய்யப்படுகிறது. திருச்சியில் இருந்து புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்16796), சென்னையில் இருந்து புறப்படும் ரெயில் (வண்டி எண் 16795) மாற்றம் செய்யப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயில் (வண்டி எண் 16852), சென்னையில் இருந்து புறப்படும் ரெயில் எண் (வண்டி எண் 16851) என மாற்றம் செய்யப்படுகிறது.

இந்த ரெயில் எண்கள் மாற்றம் வருகிற மார்ச் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Next Story