புரோகிதர் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
அத்திமலைப்பட்டு கிராமத்தில் புரோகிதர் வீட்டில் 10 பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு கிராமம் அக்ரஹாரத்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 52), புரோகிதர். இவரது மனைவி ரேவதி.
நேற்று முன்தினம் பகல் பிரபாகரன் தனது மனைவி ரேவதியுடன் வீட்டைப் பூட்டிக் கொண்டு வேலூரில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். நேற்று அதிகாலை பிரபாகரனின் வீட்டில் வேலை செய்யும் காந்தி என்பவர் வாசல் தெளிக்க வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த அவர் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்களால் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் உள்ள 10 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி மற்றும் ரூ.25 ஆயிரம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. திருட்டு போன தங்க நகைகளின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் அதே தெருவில் முன்னாள் ராணுவ வீரர் ராமகிருஷ்ணன், சண்முகசுந்தரம் மற்றும் ரோட்டுத்தெருவில் வசிக்கும் மதுரைவீரன் ஆகிய 3 பேரின் வீடுகளிலும் மர்ம நபர்கள் திருட புகுந்துள்ளனர். ஆனால் அங்கு எதுவும் கிடைக்காததால் திருடர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story