பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு எதிரொலி: மெட்ரோ ரெயில் சேவை 380 ஆக அதிகரிப்பு
பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு எதிரொலியாக மெட்ரோ ரெயில் சேவை 380 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
மும்பையில் முதல் கட்டமாக புறநகர் பகுதியான காட்கோபர்- வெர்சோவா இடையே மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயில்களை மும்பை மெட்ரோ ஒன் நிறுவனம் இயக்கி வருகிறது. பயன்பாட்டிற்கு வந்தது முதலே மெட்ரோ ரெயில் சேவைக்கு பயணிகளின் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
மேலும் மெட்ரோ ரெயிலில் பயணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது தினசரி 3 லட்சத்து 35 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை மாதந்தோறும் 77 லட்சம் முதல் 99 லட்சம் வரை பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி இருந்தனர். நவம்பர் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிரடியாக 1 கோடியை தாண்டியது.
இதன் காரணமாக மெட்ரோ ஒன் நிறுவனம் தினசரி இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவையை அதிகரித்து உள்ளது. இதன்படி தினசரி 370 முறை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரெயில் சேவை 380 சேவைகளாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

Related Tags :
Next Story