மின்வேலியில் சிக்கி 3 வயது சிறுத்தை செத்தது விவசாயி கைது
கொள்ளேகால் தாலுகாவில் மின்வேலியில் சிக்கி 3 வயது சிறுத்தை செத்தது. இதுதொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.
கொள்ளேகால்,
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அருகே சிம்மராஜிபுரா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி புலிகள், சிறுத்தைகள், காட்டு யானைகள் போன்ற வனவிலங்குகள் கிராமத்துக்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் அவை விளைநிலங்களுக்கு சென்று பயிர்களை நாசப்படுத்துகின்றன. இதனால் அந்தப்பகுதி விவசாயிகள் தோட்டங்களை சுற்றிலும் சட்டவிரோதமாக மின்வேலிகள் அமைத்துள்ளனர்.
இந்தநிலையில் அந்தப்பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற விவசாயி தனது தோட்டத்தில் சோளம் பயிரிட்டுள்ளார். இதனால் தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்திருந்தார். இந்த நிலையில் வனப்பகுதியில் வெளியேறிய சிறுத்தை ஒன்று சுரேசின் தோட்டத்திற்குள் நுழைய முயன்றது.
அப்போது அந்த சிறுத்தை மின்வேலியில் சிக்கியதாக தெரிகிறது. இதனால் அந்த சிறுத்தை மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுத்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது. இதுபற்றிய தகவல் அறிந்த பிளிகிரிரங்கணபெட்டா வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சுரேஷ் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்ததும், அந்த மின்வேலியில் சிக்கி சிறுத்தை மின்சாரம் தாக்கி செத்ததும் தெரியவந்தது. மேலும் பலியான சிறுத்தை 3 வயது நிரம்பியது ஆகும்.
இதுகுறித்து பிளிகிரிரங்கணபெட்டா வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சுரேசை கைது செய்தனர். மேலும் சுரேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மின்வேலியில் சிக்கி சிறுத்தை செத்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story