மாவட்ட செய்திகள்

மனோகர் பாரிக்கருடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்திப்பு + "||" + Manohar Parrikar Vice President Venkaiah Naidu meeting

மனோகர் பாரிக்கருடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்திப்பு

மனோகர் பாரிக்கருடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்திப்பு
மும்பை ஆஸ்பத்திரியில் கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கருடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்திப்பு உடல்நலம் விசாரித்தார்.
மும்பை,

கோவா முதல்-மந்திரியான மனோகர் பாரிக்கர் உடல்நல குறைவு காரணமாக கடந்த 15-ந் தேதி மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கணையத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. தற்போது அவர் உடல் நிலை தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மும்பை வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மருத்துவமனைக்கு சென்று மனோகர் பாரிக்கரை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அப்போது அவர் ஆஸ்பத்திரியில் 15 நிமிடம் இருந்தார். நேற்று முன்தினம் மும்பை வந்த பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனையில் மனோகர் பாரிக்கரை சந்தித்து உடல்நிலை விசாரித்தது குறிப்பிடத்தக்கது.